அடுக்குமாடி குடியிருப்பில் தீ குதித்த மூதாட்டி உயிரிழப்பு
அடுக்குமாடி குடியிருப்பில் தீ குதித்த மூதாட்டி உயிரிழப்பு
ADDED : பிப் 22, 2024 02:20 AM
புதுடில்லி:டில்லி துவாரகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்காவது மாடியில் இருந்து குதித்த 83 வயது மூதாட்டி உயிரிழந்தார். காயம் அடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துவாரகா 10வது செக்டார் பசிபிக் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மதியம் 12:30 மணிக்கு தீப்பற்றியது.
தகவல் அறிந்து, ஆறு வண்டிகளில் 1:05 மணிக்கு வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நான்காவது மாடியின் ஒரு வீட்டில் புகை மண்டலம் சூழ்ந்ததால், அங்கு வசித்த ஜசூரி தேவி, 83, பூஜா பந்த்,30 ஆகிய இருவரும் பால்கனிக்கு வந்தனர்.
திடீரென ஜசூரி தேவி கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார். தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பூஜா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.