ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி மூதாட்டியிடம் பணம் கொள்ளை
ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி மூதாட்டியிடம் பணம் கொள்ளை
ADDED : ஆக 10, 2025 12:17 AM
கோழிக்கோடு:கேரளாவில், ஓடும் ரயிலில் இருந்து மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
மஹாராஷ்டிராவின் பன்வேல் என்ற இடத்தில் இருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், கேரளாவின் திருச்சூருக்கு, 65 வயது மூதாட்டி ஒருவர் பயணித்தார். உடன் அவரது சகோதரரும் இருந்தார்.அதிகாலை 5:00 மணியளவில், ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடைந்தது.
அப்போது மூதாட்டியின் சகோதரர் கழிப்பறை சென்றார். உடன் சென்ற பெண், ரயிலின் வாசற் கதவு அருகே நின்றார்.
அப்போது அங்கு வந்த நபர், வயதான மூதாட்டியின் கையில் இருந்த பையை பிடுங்க முயன்றார். பையை விடாமல் அவர் போராடினார். இதையடுத்து, ஓடும் ரயிலில் இருந்து மூதாட்டியை கீழே தள்ளிவிட்ட அந்த நபர், தானும் குதித்தார்.
பின்னர் மூதாட்டியிடம் இருந்த 8,000 ரூபாய் மற்றும் 'மொபைல் போன்' ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினார். அந்த நேரத்தில், ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததால், அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். தலையில் காயம் ஏற்பட்டது.