100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்; ஒலிம்பிக் முன்னாள் வீராங்கனையின் குடும்பத்தினர் 3 பேர் பலி
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்; ஒலிம்பிக் முன்னாள் வீராங்கனையின் குடும்பத்தினர் 3 பேர் பலி
ADDED : பிப் 22, 2025 04:57 PM

இடுக்கி: கேரளாவில் 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஒலிம்பிக் முன்னாள் வீராங்கனை கே.எம்.பீனாமோலின் தங்கை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இந்திய முன்னாள் தடகள வீராங்கனை கே.எம்.பீனாமோலின் தங்கை ரீனா,48. இவரது கணவர் பாஸ்,55, மற்றும் உறவினர் ஆப்ரஹாமுடன், முள்ளக்கணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
இடுக்கி மாவட்டம் பன்னியார்குட்டி அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பீனாமோல் மற்றும் அவரது சகோதர் கே.எம்.பினுவும் தடகள வீரர், வீராங்கனைகள் ஆவர். இவர்கள் 2000ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பீனாமோல் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.