ஒலிம்பிக் ஜாம்பவான் உசேன் போல்ட் கனவு அணியில் விராட் கோலி, பிரெட் லீ, ரோட்ஸ்!
ஒலிம்பிக் ஜாம்பவான் உசேன் போல்ட் கனவு அணியில் விராட் கோலி, பிரெட் லீ, ரோட்ஸ்!
ADDED : அக் 04, 2025 10:59 AM

புதுடில்லி: தொடர் ஓட்டத்தில் கனவு அணியை தேர்வு செய்யும்படி கூறியதற்கு, தனது அணியில் விராட் கோலி, பிரெட் லீ, ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் இடம் பெறுவர் என்று ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தெரிவித்தார்.
ஒலிம்பிக் ஜாம்பவான் உசேன் போல்ட். இவர் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கங்களை வென்றவர். இவர் தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர். இவர் ஒரு கிரிக்கெ ட் வீரராக வாழ்க்கையை தொடங்கி பின்னர் ஓட்டப்பந்தயத்திற்கு மாறியதாக தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களை கொண்ட தொடர் ஓட்ட அணியை தேர்வு செய்யும்படி அவரிடம் பேட்டி எடுத்தவர் கேட்க, அதன்படி தேர்வு செய்தார் உசேன் போல்ட். தனது அணியில் விராட் கோலி நிச்சயம் இடம் பெறுவார். ஏனெனில், அவர் சிறந்த ஓட்டத்தை வெளிப்படுத்துவதை பார்த்திருக்கிறேன் என்றார்.
அதேபோல, பிரெட் லீ, ஜான்டி ரோட்ஸ் ஆகியோரும் சிறந்த பீல்டர்கள். அவர்கள், தன் கனவு தொடர் ஓட்ட அணியில் நிச்சயம் இடம் பெறுவர் என்கிறார். ஓட்டப்பந்தய வீரராக இல்லாவிட்டால், கிரிக்கெட் வீரராகி இருப்பேன் என்று கூறும் போல்ட், ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கங்களை வென்றவர்.
மேலும் உசேன் போல்ட் கூறியதாவது: என் தந்தை கிரிக்கெட் ரசிகர். நான் ஒரு கிரிக்கெட் வீரர். எனது கிரிக்கெட் பயிற்சியாளர் அறிவுறுத்தல் படி நான் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் காட்டினேன். அவர் அவ்வாறு அறிவுறுத்தல் வழங்காமல் இருந்தால் நான் கிரிக்கெட் விளையாடுவதை தொடர்ந்து இருப்பேன்.
நான் பல கிரிக்கெட் வீரர்களை பார்த்து வளர்ந்தேன். சச்சின், லாரா, அம்புரோஸ் என பல வீரர்களை பார்த்து வளர்ந்தேன். நான் தேர்வு செய்த வீரர்களின் செயல்பாடுகளை பல வருடங்களாக கவனித்து வந்துள்ளேன். நான் அவர்களின் ரசிகன். இவ்வாறு உசேன் போல்ட் கூறியுள்ளார்.