கட்சிகளுக்கு நடத்தை விதி : ஓம் பிர்லா வலியுறுத்தல்
கட்சிகளுக்கு நடத்தை விதி : ஓம் பிர்லா வலியுறுத்தல்
UPDATED : ஜன 21, 2025 11:22 PM
ADDED : ஜன 21, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா :பீஹார் தலைநகர் பாட்னாவில், 85வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு, இரு நாட்களாக நடந்தது.
மாநாட்டின் நிறைவு அமர்வில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:
சட்டசபைகளின் கண்ணியத்தை நிலைநிறுத்த, அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். தங்களின் எம்.எல்.ஏ.,க்களுக்கான நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
கடந்த 1947 முதல் இன்று வரையிலான பார்லி., விவாதங்கள், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட, 22 மொழிகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போல, மாநில சட்ட சபைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.