ADDED : அக் 18, 2024 11:00 PM
பீட்ரூட்ல செஞ்ச அல்வா, பொறியல் சாப்பிட்டு இருப்போம். ஆனா பீட்ரூட்ல ஓமப்பொடி சாப்பிட்டு இருப்போமா? என்னது பீட்ரூட்டில ஓமப்பொடியா? வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
ஒரு பீட்ரூட் எடுத்துக்கலாம்... அதன் தோலை நல்லா சீவிக் கொள்ளலாம். இதை கட் பண்ணி சின்ன சின்னதா நறுக்கிக்கலாம். மிக்ஸில போட்டுக்கலாம். ஒரு டீஸ்பூன் ஓமம், தேவைப்படற அளவு தண்ணீர் சேர்த்து, நல்லா மையா அரைச்சுக்கலாம்.
ரெண்டு கப் கடலை மாவு, நாலு கரண்டி அரிசி மாவு, அரை டீஸ்பூன் உப்பு எடுத்துக்கலாம். இது மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கலாம். மையா அரைச்சு வச்சிருக்கும் பீட்ரூட் கலவையை இதனுடன் சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளலாம்.
பெரிய பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அடுப்பை பற்றவைத்து, மிதமான சூட்டில் எண்ணெயை கொதிக்க விட வேண்டும். இடியாப்பம் பிழியும் பாத்திரத்தில் பிசைந்து வைத்திருக்கும் மாவை போட்டு, இடியாப்பம் பிழிவது போன்று எண்ணெய் சட்டியில், மாவை பிழிந்து விட வேண்டும்.
நன்றாக இரு பக்கமும் பொறித்து எடுக்க வேண்டும். பின், கறிவேப்பிலையை எண்ணெயில் வதக்கி அதனுடன் சேர்க்க வேண்டும். சூடான, சுவையான பீட்ரூட் ஓமப்பொடி ரெடி
-- நமது நிருபர் -.

