ADDED : ஜன 12, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயலில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கோலார் மாவட்ட அ.தி.மு.க., துணைச் செயலர் உஷா ரஞ்சித் தலைமையில் இம்மாதம் 17ம் தேதி காலை 10:00 மணிக்கு கொண்டாடப்படுகிறது.
கர்நாடக மாநில அதிமுக செயலர் எஸ்.டி.குமார் வழிகாட்டுதலுடன் தங்கவயல் சாம்பியன் ரீப் ஹைகிரவுண்ட் திடலில் இதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
100 ஏழை பெண்களுக்கு சேலை, உணவு வழங்கப்படுகிறது. விழாவில் கோலார் மாவட்ட செயலர் விஜயன், தங்கவயல் தொகுதி செயலர் பொன் சந்திர சேகர், தலைமை பொதுக் குழுத் தலைவர் ராஜசேகர், உட்பட பலர் பங்கேற்கின்றனர்.