
மார்ச் 18, 2000
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், ராஜிவ் படேல் - அனால் தம்பதியின் மகளாக, 2000ம் ஆண்டு, இதே நாளில் பிறந்தவர் மானா படேல்.
இவர், ஆமதாபாத்தில் உள்ள, குஜராத் வித்யாபீடத்தில் நீச்சல் கற்றார். தன், 13வது வயதில், ஹைதராபாத்தில் நடந்த, 40வது ஜூனியர் தேசிய அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியில், தேசிய அளவிலான, 50 மீட்டர், 100 மீட்டர் போட்டிகளில் தங்கம் வென்றார். தேசிய பள்ளிகள் அளவிலான நீச்சல் போட்டியில், ஆறு தங்க பதக்கங்களை அள்ளினார்.
நீந்த துவங்கிய, ஐந்தாம் ஆண்டில், 71 தங்கம், 16 வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களை வென்ற துடன், மூன்று தேசிய சாதனைகளையும் முறியடித்தார். அடுத்தடுத்து, 'ஒலிம்பிக் கோல்ட் க்விஸ்ட்' போட்டி, தெற்காசிய போட்டி, சீனியர் தேசிய போட்டிகளில் பங்கேற்று, தங்க பதக்கங்களை குவித்தார்.
கணுக்கால் காயத்தையும் பொருட்படுத்தாமல், 2020ல், டோக்கியோ ஒலிம்பிக்சில், முதல் இந்திய வீராங்கனையாக பங்கேற்றார். 32 சர்வதேச பதக்கங்கள், 31 புதிய சாதனைகளுடன், 99 தேசிய பதக்கங்களுடன் நீந்தி கொண்டிருக்கிறார்.
உலக சாதனைகளை படைக்கும் கனவுகளுடன் நீச்சல் குளங்களில், மீனாய் துள்ளும், நானா படேலின், 24வது பிறந்த தினம் இன்று!

