தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டிரம்ப் கிண்டல்: பிரதமர் மோடிக்கு காங்., ஆதரவு

டிரம்ப் கிண்டல்: பிரதமர் மோடிக்கு காங்., ஆதரவு

டிரம்ப் கிண்டல்: பிரதமர் மோடிக்கு காங்., ஆதரவு


ADDED : ஜன 04, 2019 10:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2019 10:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஆப்கானிஸ்தானில், இந்தியா அமைத்துக் கொடுத்த நுாலகத்தால், யாருக்கு பயன்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டல் செய்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

கிண்டல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் நேற்று முன்தினம், நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய பிரதமர் மோடி, என்னிடம் அடிக்கடி, 'ஆப்கானிஸ்தானில், நாங்கள் நுாலகம் உருவாக்கி கொடுத்திருக்கிறோம்' என்கிறார். போர் நடக்கும் நாட்டில், நுாலகம் அமைப்பதால், என்ன பயன்... ஆப்கானிஸ்தானில், இந்தியா அமைத்துக் கொடுத்த நுாலகத்தை, யார் பயன்படுத்துகின்றனர் என தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு எதிர்ப்பு

டிரம்பின் இந்த பேச்சுக்கு, மத்திய அரசு அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில், வளர்ச்சி பணிகளால் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் மட்டும், உலக நாடுகளின் பணிகள் முடிந்து விடவில்லை. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான பல பணிகளை, இந்தியா செய்து வருகிறது. பள்ளிக்கூடம், மாணவர்களுக்கு உதவித் தொகை என பல உதவிகளை, செய்துள்ளது, அதில் ஒரு பகுதியாகத் தான், நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் அஹமது படேல் கூறுகையில், பிரதமர் மோடி குறித்து அமெரிக்க அதிபரின் பேச்சு சரியானது அல்ல. இதனை ஏற்க முடியாது. அமெரிக்காவிற்கு மத்திய அரசு கடும் பதிலடி கொடுக்கும் என நான் நம்புகிறேன். கடந்த 2004 முதல், ஆப்கனில் சாலைகள் அமைக்கவும், அணைகள் கட்டவும் இந்தியா உதவி செய்து வருவதையும், 300 கோடி நிதிஉதவி அளித்துள்ளதை அமெரிக்காவிற்கு நினைவுபடுத்த வேண்டும் என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், பிரதமர் மோடியை கிண்டல் செய்வதை அதிபர் டிரம்ப் நிறுத்தி கொள்ள வேண்டும். ஆப்கன் வளர்ச்சிக்கு, இந்தியா செய்யும் உதவிக்கு அமெரிக்காவின் பாராட்டு தேவையில்லை. ஆப்கன் பார்லிமென்ட் கட்ட,பிரதமராக இருந்த மன்மோகன் சிங் உதவி செய்தார். பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கு மனித நேயம் தேவைப்படுகிறது. நாங்கள் ஆப்கன் சகோதர, சகோதரிகளுடன் உடன் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us