ஓணம் சரக்கு சேல்ஸ்; ஓவரா தான் போச்சு! மகாபலி வருகையை மதுவுடன் கொண்டாடிய சேட்டன்கள்!
ஓணம் சரக்கு சேல்ஸ்; ஓவரா தான் போச்சு! மகாபலி வருகையை மதுவுடன் கொண்டாடிய சேட்டன்கள்!
ADDED : செப் 16, 2024 05:36 PM

திருவனந்தபுரம்; கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 124 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.
கேரளாவில் 10 நாட்கள் நடைபெறும் ஓணம் திருவிழா புகழ் பெற்ற ஒன்று. அந்த 10 நாட்களும் கேரள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இந் நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் எதிரொலியாக மதுபானங்கள் விற்பனை எப்படி உள்ளது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.
கிட்டத்தட்ட ரூ.124 கோடிக்கு ஒரே நாளில் மதுபானங்கள் விற்பனை சக்கை போடு போட்டுள்ளது. கடந்தாண்டு இதன் விற்பனை ரூ.116 கோடியாக இருந்தது. கொல்லத்தில் உள்ள சில்லரை விற்பனை மதுக்கடையில் ரூ.1.15 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கின்றன.
அதிக மதுபானங்கள் விற்பனையான 2வது கடை என்ற பெயரை கருணாகப்பள்ளியில் உள்ள சில்லரை விற்பனை மதுக்கடை பெற்றுள்ளது. 3வது இடத்தை சாலக்குடியில் உள்ள மதுக்கடை பிடித்துள்ளது. இருஞ்சாலக்குடா கடைக்கு 4ம் இடம் கிடைத்துள்ளது.
கடந்தாண்டு இதே இருஞ்சாலக்குடா கடையில் மட்டும் ரூ. 1.06 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. ஓணம் கொண்டாட்டங்கள் இன்னமும் நிறைவடையாத நிலையில் மதுபான விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

