UPDATED : செப் 20, 2024 11:06 AM
ADDED : செப் 20, 2024 05:48 AM

வறுமையை ஒழிக்கலாம்!
இந்தியா போன்ற மிக பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால், மக்கள் பணம் விரயமாகிறது. லோக்சபா, சட்டசபை தேர்தல் ஒரே முறை நடத்துவதால் விரயமாகும் பணத்தை வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம். நாட்டில் இன்னும் பல குடும்பங்கள் வறுமையில் உள்ளனர். வறுமையை ஒழித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம். மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.
ஸ்ரீதேவி ஷெட்டி, குடும்ப தலைவி, சீகேஹள்ளி
----------
மோடியின் நோக்கம்!
நம் நாடு, பல மொழிகளையும், பல மாநிலங்களையும் கொண்டது. பல தரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த அனைத்தும் ஒருங்கிணைந்தது தான் நாடு. ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்துவது, இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது. இதை இந்தியாவில் அமல்படுத்த முடியாது. எதிர்காலத்தில், அமெரிக்கா போன்று, நேரடியாக அதிபர் தேர்தல் நடத்துவது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம். அதற்கான முயற்சியாக தான் ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்துவது.
படகலபுர நாகேந்திரா, தலைவர், மாநில விவசாய சங்க தலைவர், மைசூரு
கள்ள ஓட்டு சாத்தியமில்லை!
மத்திய அரசு நல்ல முடிவு தான் எடுத்துள்ளது. சட்டசபை, பார்லிமென்ட் தேர்தலை ஒரே முறையில் நடத்துவதால், பாதுகாப்பு ஏற்பாடு செய்வது உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மக்களுக்கு குளறுபடி ஏற்படுவதை தடுக்க, போதுமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். புதிய முடிவால், கள்ள ஓட்டு போட சாத்தியம் இல்லை. இவ்வளவு நாட்களாக அண்டை மாநிலத்திலும் ஓட்டு போட்டு விட்டு, அங்கு வைக்கும் மையை அழித்து விட்டு, மற்றொரு மாநிலத்திலும் போட்டவர்கள் ஏராளம். நாட்டில் உண்மையான வாக்காளர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
ராஜா, மெக்கானிக்கல் பொறியாளர், கார்வேபாவிபாளையா
--------
பொருளாதாரம் உயரும்!
பல நாடுகளில் ஏற்கனவே ஒரே நாடு - ஒரே தேர்தல் நடமுறையில் உள்ளது. தற்போது டிஜிட்டல் மயமாகி உள்ளதால், அதை பயன்படுத்தி சுலபமாக நம் நாட்டிலும் அமல்படுத்துவது சிறந்தது. செலவை குறைப்பது மட்டுமின்றி, நம்முடைய பொருளாதாரமும் உயரும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், ஏதாவது ஒரு மாநிலத்துக்கு மூன்று, நான்கு மாதங்களில் தேர்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால், அரசியல் தலைவர்களால், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவதை விட, தேர்தலில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
- லாவண்யா ஜெகன்நாதன், மென்பொருள் பொறியாளர், மாரத்தஹள்ளி
***
வறுமையை ஒழிக்கலாம்!
இந்தியா போன்ற மிக பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால், மக்கள் பணம் விரயமாகிறது. லோக்சபா, சட்டசபை தேர்தல் ஒரே முறை நடத்துவதால் விரயமாகும் பணத்தை வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம். நாட்டில் இன்னும் பல குடும்பங்கள் வறுமையில் உள்ளனர். வறுமையை ஒழித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம். மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.
ஸ்ரீதேவி ஷெட்டி
குடும்பத்தலைவி, சீகேஹள்ளி
மோடியின் நோக்கம்!
நம் நாடு, பல மொழிகளையும், பல மாநிலங்களையும் கொண்டது. பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த அனைத்தும் ஒருங்கிணைந்ததுதான் நம் நாடு. ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்துவது, இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது. இதை இந்தியாவில் அமல்படுத்த முடியாது. எதிர்காலத்தில், அமெரிக்கா போன்று, நேரடியாக அதிபர் தேர்தல் நடத்துவது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம். அதற்கான முயற்சியாகத்தான் ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்துவது.
படகலபுர நாகேந்திரா,
தலைவர், மாநில விவசாய சங்கத் தலைவர், மைசூரு.
கள்ள ஓட்டு இருக்காது!
மத்திய அரசு நல்ல முடிவு தான் எடுத்துள்ளது. சட்டசபை, பார்லிமென்ட் தேர்தலை ஒரே முறையில் நடத்துவதால், பாதுகாப்பு ஏற்பாடு செய்வது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய முடிவால், கள்ள ஓட்டு போட சாத்தியம் இல்லை. இவ்வளவு நாட்களாக அண்டை மாநிலத்திலும் ஓட்டு போட்டு விட்டு, அங்கு வைக்கும் மையை அழித்து விட்டு, மற்றொரு மாநிலத்திலும் ஓட்டு போட்டவர்கள் ஏராளம்.
ராஜா,
மெக்கானிக்கல் பொறியாளர். கார்வேபாவிபாளையா