sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரே நாடு ஒரே தேர்தல்; பா.ஜ., ஆதரவு; இண்டியா கூட்டணி எதிர்ப்பு!

/

ஒரே நாடு ஒரே தேர்தல்; பா.ஜ., ஆதரவு; இண்டியா கூட்டணி எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல்; பா.ஜ., ஆதரவு; இண்டியா கூட்டணி எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல்; பா.ஜ., ஆதரவு; இண்டியா கூட்டணி எதிர்ப்பு!

22


UPDATED : செப் 18, 2024 09:57 PM

ADDED : செப் 18, 2024 08:05 PM

Google News

UPDATED : செப் 18, 2024 09:57 PM ADDED : செப் 18, 2024 08:05 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ' ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஆளுங்கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைவர்கள் கூறியதாவது:

ஆதரவு

Image 1322464

மத்திய அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையில், பாரதம் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. தேர்தல் சீர்திருத்தம் என்ற நோக்கில், ஒரே நாடு மற்றும் ஒரே தேர்தல் குறித்த உயர்மட்ட குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுத்தமான மற்றும் நேர்மையான தேர்தல் மூலம் ஜனநாயகம் வலுப்பெறும் என்ற பிரதமரின் கொள்கை வலுப்பெறுவதுடன், பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Image 1322465இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். 80 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

Image 1322466நாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். அரசியலை தாண்டி நாட்டு நலன் முக்கியம்.

எதிர்ப்பு


காங்கிரஸ் தலைவர் கார்கே

Image 1322468இதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜனநாயகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்த முடியாது. நமது ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால், தேவைப்படும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டியது முக்கியம்.

தி.மு.க.,வின் டிகேஎஸ் இளங்கோவன்

Image 1322469மத்திய அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. 22 மொழி பேசும், பல்வேறு மதங்கள், ஜாதிகள், பிரிவினர் மற்றும் கலாசாரம் கொண்ட மக்கள் வசிக்கும் நாடு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரே நாடு என எண்ணிக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கின்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

Image 1322470மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை வழங்கவும், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க வேண்டும் என்ற மறைமுக திட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து பா.ஜ., கற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி., மனோஜ் ஜா

அரசு கவிழ்ந்தால் என்ன செய்வீர்கள். ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவீர்களா? தேர்தல் நடத்தும் வரை கவர்னர் மூலம் ஆட்சியை நடத்துவீர்களா? மக்களின் கவனத்தை திசை திருப்ப இது போன்ற முயற்சி நடக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தின் ஆன்மாவை நொறுக்க முயற்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us