தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'பார்க்கிங்' தகராறில் துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து ஒருவர் காயம்

'பார்க்கிங்' தகராறில் துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து ஒருவர் காயம்

'பார்க்கிங்' தகராறில் துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து ஒருவர் காயம்


UPDATED : அக் 08, 2026 05:49 PM

ADDED : அக் 08, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 05:49 PM ADDED : அக் 08, 2026 03:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வடகிழக்கு டெல்லியின், பஜன்புரா பகுதியில், வாகனங்களை நிறுத்துவது தொடர்பான தகராறின் போது, ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். தகராறை விலக்கிவிட வந்தவர் மீது குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

பஜன்புரா பகுதியில் சுபாஷ் விஹார் பகுதியில், வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக, ஜாஹிர் அகமது, 35 என்பவருக்கும், ராஜு உஸ்மானி, 55 என்பவருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. வாகனம் நிறுத்தும் போது, ஜாஹிரின் கார் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

உஸ்மானியை மெபைல் போனில் தொடர்பு கொண்ட ஜாஹிர் மற்றும் அவரது நண்பர் டேனிஷ் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உஸ்மானி சென்றார். அங்கு அவருக்கும், ஜாஹீர் மற்றும் டேனிஷ் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, டேனிஷ் சிலரை அழைத்ததையடுத்து, அங்கு மூன்று பேர் வந்துள்ளனர்.

இதற்கிடையில், உஸ்மானிக்கு அறிமுகமான இம்ரான் என்பவர், தகராறைத் தீர்க்கும் முயற்சியில் தலையிட்டார். அப்போது, ஜாஹிர் திடீரென தன்னிம் இருந்த தானியங்கி துப்பாக்கியால், உஸ்மானியை நோக்கிச் சுட்டுள்ளார். ஆனால், துப்பாக்கி குண்டு இம்ரானின் முதுகில் பாய்ந்தது. துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு ஜாஹீர், டேனிஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்.

இம்ரானை, அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீட்டு, ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பஜன்புரா போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, ஜாஹிர் அகமதுவை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஜாஹிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினர். அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us