UPDATED : நவ 28, 2026 06:20 PM
ADDED : நவ 28, 2026 06:16 PM
புதுடில்லி: சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி, இளைஞர் காயம் அடைந்தார்.
மத்திய டில்லி, ஆரம்பாக், அம்பேத்கர் சாலையில் ‘பான் பீடா’ கடை நடத்துபவர் ரமேஷ், 40. சம்பவத்தன்று, சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த, ‘ஸ்கார்பியோ’ கார், ரமேஷ் மற்றும் இருவர் மீது மோதியது.
பலத்த காயம் அடைந்த ரமேஷை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, ராம் மனோகர் லோஹியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மற்ற இரு சிறுவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்டவுடன், அந்தக் காரை ஓட்டி வந்த சிறுவன், வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினான். தகவல் அறிந்து, பஹர்கஞ்ச் போலீசார் விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் இருந்த ஸ்கார்பியோ காரை கைப்பற்றினர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, அந்தக் காரை ஓட்டிய சிறுவன் குறித்து விசாரித்து வருகின்றனர். கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
