sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரு லட்சம் கோடி ரூபாய் * பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் ரேகா * பெண்களுக்கு ரூ.2,500 வழங்க ரூ.5,100 கோடி * யமுனை நதியை சுத்தம் செய்ய ரூ. 500 கோடி * திஹார் சிறை புறநகர் பகுதிக்கு மாற்றம்

/

ஒரு லட்சம் கோடி ரூபாய் * பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் ரேகா * பெண்களுக்கு ரூ.2,500 வழங்க ரூ.5,100 கோடி * யமுனை நதியை சுத்தம் செய்ய ரூ. 500 கோடி * திஹார் சிறை புறநகர் பகுதிக்கு மாற்றம்

ஒரு லட்சம் கோடி ரூபாய் * பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் ரேகா * பெண்களுக்கு ரூ.2,500 வழங்க ரூ.5,100 கோடி * யமுனை நதியை சுத்தம் செய்ய ரூ. 500 கோடி * திஹார் சிறை புறநகர் பகுதிக்கு மாற்றம்

ஒரு லட்சம் கோடி ரூபாய் * பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் ரேகா * பெண்களுக்கு ரூ.2,500 வழங்க ரூ.5,100 கோடி * யமுனை நதியை சுத்தம் செய்ய ரூ. 500 கோடி * திஹார் சிறை புறநகர் பகுதிக்கு மாற்றம்


UPDATED : மார் 25, 2025 08:59 PM

ADDED : மார் 25, 2025 06:38 PM

Google News

UPDATED : மார் 25, 2025 08:59 PM ADDED : மார் 25, 2025 06:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி சட்டசபையில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை, முதல்வர் ரேகா குப்தா நேற்று தாக்கல் செய்தார். யமுனை நதியை சுத்தம் செய்தல், பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதி, உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

டில்லி சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ., 26 ஆண்டுகளுக்கு தலைநகர் டில்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது.

தொடந்து இரண்டு முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், பல தொகுதிகளில் டிபாசிட் தொகையை பறிகொடுத்தது.

சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேகா குப்தா, முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். பா.ஜ., மூத்த தலைவர்கள் பர்வேஷ் வர்மா உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவராக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஆதிஷி சிங் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் துவங்கியது. வரும் 28ம் தேதி வரை நடக்கவுள்ள இந்தக் கூட்டத் தொடரில், 2025 - 2026ம் நிதியாண்டுக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை, முதல்வர் ரேகா குப்தா நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:

தலைநகர் டில்லியில் 26 ஆண்டுகளுக்குப் பின், ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ., அரசு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 31.5 சதவீதம் அதிகம். டில்லியில் ஊழல் மற்றும் நிர்வாகத் திறன் அற்ற ஆட்சியாளர்களின் சகாப்தம் முடிந்து விட்டது.

டில்லி மாநகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 28,000 கோடி ரூபாய் செலவிடப்படும். மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டில்லியைக் கடந்து செல்லும், டில்லி மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புனித நதியான யமுனையை சுத்தம் செய்ய 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சீரமைத்து மேம்படுத்த 500 கோடி ரூபாய், பழைய கழிவுநீர் கால்வாய்களை மாற்ற 250 கோடி ரூபாய் செலவிடப்படும்.

அனைவருக்கும் தூய்மையான குடிநீர் வழங்கவும், சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் 9,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மருத்துவத் துறைக்கு 6,874 கோடி ரூபாய் செலவிடப்படும். ஆரோக்கிய மையங்கள் அமைத்தல், ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர் திட்டம் ஆகியவற்றுக்கு இந்த நிதியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சத்துணவு மையங்களுக்கு நவீன இயந்திரங்கள் வாங்க 210 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு 21,000 உதவித் தொகை வழங்கப்படும். என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தை இணைக்கும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்புக்கு 1,000 கோடி ரூபாய் உட்பட போக்குவரத்து துறைக்கு 12,952 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டில்லி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தில் இளஞ்சிவப்பு டிக்கெட் தற்போது வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முறைகேட்டைத் தடுக்க டிக்கெட்டுக்குப் பதிலாக, கார்டு வழங்கப்படும்.

பா.ஜ., தன் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதியுள்ள பெண்களுக்கு, மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்க, 5,100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக, டில்லி மாநகர் முழுதும் மேலும், 50,000 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.

தேனீ வளர்க்க ரூ. 50 கோடி


டில்லியை முதலீட்டுக்கான ஏற்ற நகரமாக மாற்றுவது மிகவும் முக்கியம். அதற்கான புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய கிடங்கு கொள்கை அறிமுகப்படுத்தப்படும். அதேபோல, வியாபாரிகள் நலனுக்காக வணிகர் நல வாரியம் அமைக்கப்படும்.

சர்வதேச அளவிலான முதலீட்டு உச்சி மாநாடு இந்த நிதியாண்டுக்குள் நடத்தி, முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டும்.

சிறுதொழில்களை ஊக்குவிக்க தேனீ வளர்ப்பு உள்ளிட்ட திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் சர்வதேச திரைப்பட விழா நடத்த 30 கோடி ரூபாய் செலவிடப்படும்.

அடல் கேன்டீன்


குடிசைப் பகுதிகளை மேம்பாடுத்த 696 கோடி ரூபாய், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 100 இடங்களில் மலிவு விலை உணவு வழங்கும் 'அடல் கேன்டீன்' திறக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையை சீர்திருத்த, மத்திய அரசின் 'புதிய கல்விக் கொள்கை -2020'ப்படி 'பி.எம்.ஸ்ரீ பள்ளி'கள் திறக்க 100 கோடி ரூபாய் டில்லி அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறும் 1,200 மாணவ - மாணவியருக்கு இலவச 'லேப் - டாப்' வழங்க 7.5 கோடி ரூபாய் செலவிடப்படும். நரேலாவில் புதிய கல்வி மையம் அமைக்கப்படும்.

மாநகர் முழுதும் மேல்நிலை மின் ஒயர்களை அகற்றி, உயர் அழுத்த ஒயர் மாற்றும் திட்டத்துக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளோம்.

சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைக்கு 506 கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் வழங்கப்படும்.

உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக டில்லி மாநகராட்சிக்கு 6,897 கோடி ரூபாய் டில்லி அரசு வழங்கும். திஹார் சிறை, புறநகர் பகுதிக்குக் மாற்றம் செய்யப்படும். புதிய சிறையும் அமைக்கப்படும். கும்மன்ஹேராவில் 40 கோடி ரூபாய் செலவில் நவீன பசுக் காப்பகம் கட்டப்படும்.

இது, வழக்கமாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டும் பட்ஜெட் மட்டுமல்ல, டில்லியின் எதிர்காலத்துக்கான திட்டங்கள். இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டவை அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் அல்ல.

பா.ஜ.,வுக்கும் ஆம் ஆத்மிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஆம் ஆத்மி அரசில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், அரசு தனக்கு வழங்கிய பங்களாவை, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவழித்து அரண்மனை போல மாற்றிக் கொண்டார்.

ஆனால், பாஜ., அரசு மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவோம். கெஜ்ரிவால் தன் பங்களாவில் பல லட்சம் ரூபாய் செலவில், நவீன கழிப்பறை கட்டினார். பா.ஜ., அரசு, குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு கழிப்பறை கட்ட முடிவு செய்துள்ளது.

அதேபோல, ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் கல்வியின் தரம் குறித்து மக்களை தவறாக வழிநடத்தினர். ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் கல்வியில் பின் தங்கிய மாணவ - மாணவியரை வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்துள்ளனர். நன்றாகப் படிப்போரை மட்டுமே பத்தாம் வகுப்புக்கும், பிளஸ்2 வகுப்புக்கும் அனுப்பினர். அதனால்தான், பத்து மற்றும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் சிறப்பாக வெளிவந்தன. பா.ஜ., ஆட்சியில் இந்த முறை முற்றிலும் மாற்றப்பட்டு, அனைவருக்கு சர்வதேச தரத்தில் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரையான் அரிப்பு


டில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த ஆம் ஆத்மி, அனைத்துத் துறைகளில் கொள்ளை அடித்துள்ளது.

தேசிய தலைநகர் டில்லியை மேம்படுத்துவதற்கான முதல் படியாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டில்லியின் பொருளாதார ஆரோக்கியத்தை கரையான் போல, ஆம் ஆத்மி தன் ஆட்சிக் காலத்தில் அரித்து விட்டது. ஒவ்வொரு துறையிலும் வீழ்ச்சியை சந்தித்த டில்லி, பா.ஜ., அரசில் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்பார்ப்பை விட அதிகம்




கடந்த ஆண்டு 2024 - 2025ம் நிதியாண்டில், ஆம் ஆத்மி அரசின் நிதி அமைச்சர் ஆதிஷி சிங், 76,000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்து, பின்னர் அதை 77,000 கோடி ரூபாயாக உயர்த்தினார். இந்த ஆண்டு 80,000 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் ரேகா குப்தா, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இடம் மாறுது திஹார்


டில்லி மாநகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள திஹார் சிறை, புறநகர்ப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படும். அதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆலோசனை சேவைக்காக 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திஹார் சிறை, 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒன்பது மத்தியச் சிறைகளை உள்ளடக்கிய திஹார் சிறைச்சாலை வளாகம் நம் நாட்டின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்று.






      Dinamalar
      Follow us