ADDED : ஜூலை 25, 2011 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை : மும்பையில், 80 ஆயிரம்,'சிம் கார்டு'களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மும்பையில், சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பை அடுத்து, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மும்பை புறநகர் பகுதியான தானேயில், பிவானி என்ற பகுதியில், அன்வர் அன்சாரி என்பவர் வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில், 80 ஆயிரம் 'சிம் கார்டு'கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார்,'கைது செய்யப்பட்டுள்ள நபர், சர்வதேச தொலைபேசி அழைப்புகள் தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.