UPDATED : அக் 10, 2026 11:24 PM
ADDED : அக் 10, 2026 09:46 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட, 21 வெளிநாட்டினர் உட்பட, 320 பேரை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆன்லைன் நிதி மோசடிகள், மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, தேசிய சைபர் குற்ற விசாரணை முகமை கடந்த வாரத்தில் லாகூர் முழுதும் சோதனை நடத்தியது.
அப்போது, அனுமதியின்றி செயல்பட்ட எட்டு சட்டவிரோத கால் சென்டர்கள் கண்டறியப்பட்டன. மேலும், மக்களை சமூக வலைதளங்கள் மூலம் ஏமாற்றவும், 'ஹனி டிராப்' எனப்படும் காதலிப்பது, பாலியல் ஆசை காட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட, 20 இளம்பெண்கள் உட்பட, 320 பேர் பிடிபட்டனர்.
இவர்களில், சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேஷியா, நேபாளம் போன்ற, 21 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள், பிரிட்டன், அமெரிக்கா, கனடா நாட்டு மக்களை குறிவைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டனர்.
