sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அய்யப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் திறப்பு

/

அய்யப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் திறப்பு

அய்யப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் திறப்பு

அய்யப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் திறப்பு


ADDED : நவ 16, 2024 06:21 AM

Google News

ADDED : நவ 16, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் செயல்படும்' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அவரின் அறிக்கை:

சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை நேற்று துவங்கி, டிச., 26 வரை நடக்கிறது. மகரவிளக்கு ஜோதி திருவிழா, டிச., 30 முதல் ஜன., 19 வரை நடைபெறுகிறது.

சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல் மையம் வரும் ஜன., 24 வரை செயல்படும். தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், இத்தகவல் மைய சேவையை, 044 - -2833 9999, 1800 425 1757 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு சேகர்பாபு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us