தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஆப்பரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: பாகிஸ்தானுக்கு கடற்படை தளபதி எச்சரிக்கை

ஆப்பரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: பாகிஸ்தானுக்கு கடற்படை தளபதி எச்சரிக்கை

ஆப்பரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: பாகிஸ்தானுக்கு கடற்படை தளபதி எச்சரிக்கை


UPDATED : டிச 02, 2025 01:34 PM

ADDED : நவ 30, 2025 08:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2025 01:34 PM ADDED : நவ 30, 2025 08:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என பாகிஸ்தானுக்கு இந்திய கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் புனேவில் சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு அர்ப்பணிக்கப் பட்ட இந்திய கடற்படை கடல்சார் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, அட்மிரல் திரிபாதி கூறியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் முடிவடையவில்லை.

கடற்படை முழுமையாக இதில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை எப்போதும் போருக்குத் தயாராக இருக்கிறது. இன்று, மோதல்கள் முன்னறிவிப்பின்றி நடக்கின்றன. இது நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. இந்த விஷயத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த நடவடிக்கை கடற்படையின் தயார்நிலையையும், திறமையையும் நிரூபித்தது. கொடூரமான பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, 96 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் கடற்படை அல்லது அவர்களின் துறைமுகங்களில் நாங்கள் தாக்குதல் நடத்த தயாராகினோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இவ்வாறு அட்மிரல் திரிபாதி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us