தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
ADDED : மே 07, 2025 09:23 AM

புதுடில்லி; பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் சமூகவலை தளங்களில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. உலகளவில் 2ம் இடத்திலும், தேசிய அளவில் முதலிடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளது.
பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ள இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறது.
மொத்தம் 9 நிலைகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட பயங்கரவாத முகாம்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இந் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
சமூக வலைதளமான எக்ஸ் வலைதளத்தில் தேசிய அளவில் ஆபரேஷன் சிந்தூர் டிரெண்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இது தவிர, தேசிய அளவில் ஜெய் ஹிந்த், இந்திய ராணுவம், பாகிஸ்தான், இந்திய விமானப்படை ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் இருக்கின்றன.
இந்த ஹேஷ்டேக்குகளில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை பாராட்டி பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை தற்போது மிக அவசியம், பாராட்டுகள் என்று பலரும் பதிவிட்டு, இந்திய ராணுவத்தை புகழ்ந்து உள்ளனர்.