தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசு தோல்வி: காங்.,

விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசு தோல்வி: காங்.,

விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசு தோல்வி: காங்.,


ADDED : ஜூலை 19, 2017 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2017 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: விவசாயிகள் பிரச்னையை கையாள்வதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.லோக்சபா இன்று துவங்கியதும் விவசாயிகள் பிரச்னையை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அமைதியாக இருக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டு கொண்டார். ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இதனையடுத்து பிற்பகல் வரை லோக்சபாவை சபாநாயகர் ஒத்திவைத்தார்.பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதாவது: விவசாயிகளுக்கு பெரிய பிரச்னை உள்ளது. விவசாய துறை முற்றிலும் அழிந்து விட்டது. தினமும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. அவர்களின் பிரச்னையை தீர்ப்பதில் அரசு தோல்வியடைந்து விட்டது. விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் செலவு செய்த தொகையை விட 50 சதவீதும் கூடுதல் வருமானம் கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்ற அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு மத்திய அமைச்சர் ஆனந்த குமார் அளித்த பதில், விவசாயிகளுக்காக மோடி அரசை விட எந்த அரசும் நலத்திட்டங்கள் செய்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதனை ஏற்காத எதிர்க்கட்சிகள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us