ADDED : ஜன 29, 2024 07:09 AM

பெங்களூரு; ''கட்சிக்காக உழைத்த எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே, கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு இரண்டு ஆண்டு கால பார்முலாவை, மேலிடம் வழங்கி உள்ளது,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு சதாசிவ நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கட்சியில் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதிகாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதனால் தான், பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்று கூறி உள்ளோம்.
இதில் சித்தராமையாவும், நானும் எதுவும் செய்ய முடியாது. கட்சி ஆட்சிக்கு வர, தொண்டர்கள் உழைத்துள்ளனர். எனவே அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளில், 136 முதல் 140 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் என கூறினர். ஆனால் என்ன நடந்தது? 534 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறட்டும்; வேண்டாம் என்று யார் சொன்னது?
இவ்வாறு அவர் கூறினார்.