ADDED : பிப் 20, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லியின் மேம்பாட்டுக்காக ஆம் ஆத்மி எப்போதும் அவருடன் துணை நிற்கும் என்பதை புதிய முதல்வரிடம் சொல்ல விரும்புகிறேன். ஒரு பெண் ஒரு மாநிலத்தை வழிநடத்தப் போகிறார் என்பது நல்ல செய்தி. தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் முதல்வராக இல்லை. பெண்களுக்கு 2,500 வழங்கும் பா.ஜ.,வின் வாக்குறுதியை ரேகா குப்தா விரைவில் நிறைவேற்றுவார் என்றும் நம்புகிறேன்.
ஆதிஷி
முன்னாள் முதல்வர்
முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றதற்கு மிக்க வாழ்த்துக்கள். டில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். டில்லி மக்களின் மேம்பாடு மற்றும் நலனுக்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம்.
அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய ஒருங்கிணைப்பாளர்
ஆம் ஆத்மி