வீட்டுக்காவலில் எதிர்கட்சி தலைவர்கள்: பா.ஜ., மீது அகிலேஷ் குற்றச்சாட்டு
வீட்டுக்காவலில் எதிர்கட்சி தலைவர்கள்: பா.ஜ., மீது அகிலேஷ் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 04, 2024 02:13 AM

லக்னோ: இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர்களை
வீட்டுக்காவலில் வைப்பதாக உ.பி. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ,
பா.ஜ. அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலில்
பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. இந்நிலையில் உ.பி
மாநிலம் கணோஜ் தொகுதியில் கட்சியினர் சந்தித்து பேசிய பின் அகிலேஷ்
கூறியது,
எதிர்கட்சி தலைவர்கள் , தேர்தலில் பணியாற்றியவர்களை பா.ஜ.,
அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. அவர்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு
செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது.
இது சரியல்ல. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம்
தலையிட்டு, அவர்களை உடனே விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும். வாக்கு எண்ணும்
மையங்களில் நியாயமான முறையில் வாக்கு எண்ணப்பட வேண்டும். இவ்வாறு அகிலேஷ்
கூறியுள்ளார்.