பீஹாரில் எதிர்கட்சிகளின் பந்த் போராட்டம்: பப்பு யாதவ், கன்னையா குமாருக்கு அனுமதி மறுப்பு
பீஹாரில் எதிர்கட்சிகளின் பந்த் போராட்டம்: பப்பு யாதவ், கன்னையா குமாருக்கு அனுமதி மறுப்பு
ADDED : ஜூலை 09, 2025 06:16 PM

பாட்னா:பீஹாரில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாகத்பந்தனின் பந்த் போராட்ட மேடையில் பப்பு யாதவ் மற்றும் கண்ணையா குமார் இருவருக்கும் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமுகவலைதளத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது.
பீஹாரில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்கட்சி கூட்டணியான மகாகத்பந்தன் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பாட்னா வந்தார். ஆர்ப்பாட்டத்திற்கு மேடையாக திறந்த லாரியை பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த மேடையில் ராகுலும் ஆர்.ஜே.டி.யின் தலைவர் தேஜஸ்வியும் ஏற்கனவே இருந்தனர். அதில் பல மகாகத்பந்தன் தலைவர்களும் இருந்தனர்.
பீஹார் மாநலத்தில் சுயேச்சை எம்.பி., பப்பு யாதவ் மற்றும் முன்னாள் ஜே.என்.யு., மாணவ சங்கத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான கண்ணையா குமார் ஆகியோர், போராட்டத்தில் பங்கேற்க மேடையில் ஏறும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மேடையில் இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் தலையிட்டு இருவரையும் தடுத்த நிலையில் இருவரும் பங்கேற்காமல் பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.