அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு:கெஜ்ரிவாலுக்கு காங்., ஆதரவு?
அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு:கெஜ்ரிவாலுக்கு காங்., ஆதரவு?
UPDATED : மே 22, 2023 06:48 PM
ADDED : மே 22, 2023 06:47 PM

புதுடில்லி: டில்லி மாநில அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தினை எதிர்க்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு காங்., ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளது.
டில்லி மாநில அரசு அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் கடந்த 11 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தலைநகரில் சட்டம் இயற்றும் மற்றும் நிறைவேற்றும் அதிகாரம் டில்லி மாநில அரசுக்கு உள்ளது என கூறியது.
![]() |
இதனை எதிர்த்து மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை இயற்றியது. இது டில்லி மாநில முதல்வரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இருப்பதாக கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஓன்றை மத்தியஅரசுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று காங்., வெளியிட்டுள்ள அறிவிப்பில், அவசர சட்டத்திற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த உள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்., ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


