கேரளாவுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்; 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்; 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ADDED : ஜூன் 25, 2025 10:32 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, மத்திய கேரளா மற்றும் வடக்கு கேரளாவில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவின் குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி மற்றும் திருச்சூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (ஜூன் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடுவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சூரல்மலை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
நாளை (ஜூன் 26) : இடுக்கி, மலப்புரம், வயநாடு
மஞ்சள் எச்சரிக்கை
நாளை (ஜூன் 26): பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு
ஜூன் 27: கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு
ஜூன் 28: கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு