தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தனியார் குடிநீர் டேங்கர் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவு

தனியார் குடிநீர் டேங்கர் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவு

தனியார் குடிநீர் டேங்கர் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவு


ADDED : பிப் 27, 2024 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : பெங்களூரு நகர மாவட்டத்தின் தாலுகாக்களின் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தனியார் குடிநீர் டேங்கர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய, உதவி செயற் பொறியாளர்கள், தாலுகா பஞ்சாயத்து செயல் அலுவலர்களுக்கு, மாவட்ட கலெக்டர் தயானந்தா உத்தரவிட்டுள்ளார்.

தனியார் குடிநீர் டேங்கர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் தயானந்தா ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பெங்களூரு நகர மாவட்டத்தின் ஐந்து தாலுாக்களில் பருவமழையால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, கிராம பஞ்சாயத்துகளில் தனியார் போர்வெல்களை கண்டறியுங்கள்.

அதன் உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து சுத்தமான குடிநீர் வசதி செய்ய வேண்டும். தண்ணீர் டேங்கர்களின் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான டெண்டர் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us