தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கடுங்குளிரில் தவிக்கும் மக்களை பாதுகாக்க உத்தரவு

 கடுங்குளிரில் தவிக்கும் மக்களை பாதுகாக்க உத்தரவு

 கடுங்குளிரில் தவிக்கும் மக்களை பாதுகாக்க உத்தரவு


ADDED : ஜன 13, 2026 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 12:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மருத்துவமனை வளாகங்களில் காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள், இரவு நேர தங்குமிடங்களில் வசிப்போரின் நிலை குறித்து வெளியான செய்தியை, உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்காக பதிவு செய்தது.

நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை, தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரை செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரவு நேர தங்குமிடங்களில் வசிப்போர் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் தங்கியிருப்போரை கடுங்குளிரில் இருந்து பாதுகாக்க தேவையான வசதிகளை செய்ய மத்திய அரசு, டில்லி அரசு மற்றும் டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us