ADDED : மார் 07, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : 'பொது இடங்களில் பொருத்தப்பட்ட போஸ்டர், பேனர்களை அகற்ற வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கை:
லோக்சபா தேர்தல் அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம். தேர்தல் அறிவிப்பு வெளியான உடன், நடத்தை விதிகள் அமலுக்கு வரும். எனவே அரசு மற்றும் பொது இடங்களில் காணப்படும் போஸ்டர், பேனர், சுவரொட்டிகளை அகற்ற வேண்டும்.
தேர்தல் அறிவிப்பு வெளியான 24 மணி நேரம், 48 நேரம் அல்லது 72 மணி நேரத்துக்குள், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், குழுக்களை அமைத்து, போஸ்டர், பேனர், சுவரொட்டிகளை அப்புறப்படுத்துவது அவசியம். இவற்றை அகற்றியது குறித்து, மின்னஞ்சல் வழியாக அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

