திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / ஒப்புதல் பெற்ற பிற திட்டங்கள் / ஒப்புதல் பெற்ற பிற திட்டங்கள்
/
செய்திகள்
ஒப்புதல் பெற்ற பிற திட்டங்கள்
ADDED : செப் 19, 2024 02:18 AM
விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்கவும், நுகர்வோருக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்தவும், பி.எம்., ஆஷா எனப்படும், பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக் ஷன் அபியான் திட்டங்களை தொடர, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான, மொத்த நிதி ஒதுக்கீடு, 35,000 கோடி ரூபாயாக இருக்கும். இது, விலை ஆதரவு திட்டம், விலை நிலைப்படுத்துதல் நிதி, விலை பற்றாக்குறை செலுத்தும் திட்டம், சந்தை தலையீடு திட்டம் ஆகியவற்றின் அம்சங்களைக் கொண்டிருக்கும்.
விவசாயிகளுக்கு மலிவு விலையில் பயிர் ஊட்டச்சத்துக்களை வழங்குவதை உறுதி செய்ய, 2024 அக்., 1 - -2025 மார்ச் 31 வரையிலான ரபி பருவத்தில், பாஸ்பேட் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கு, 24,474.53 கோடி ரூபாய் மானியம் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. விவசாயிகளுக்கு மானியம், மலிவு விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
நாடு முழுதும் உள்ள பழங்குடியின சமூகங்களின் சமூக- - பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த, 2024 - 25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 79,156 கோடி ரூபாய் மதிப்பிலான, பிரதம மந்திரி பழங்குடியினர் முன்மாதிரி கிராம திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பழங்குடியினர் பெரும்பான்மை உள்ள, 63,000 கிராமங்களில், 5 கோடி பழங்குடியின குடும்பங்களுக்கு அனைத்து அரசு சலுகைகளையும் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.