இந்த மூன்று பிரிவினரே எங்கள் கடவுள்: அகிலேஷ் யாதவ்
இந்த மூன்று பிரிவினரே எங்கள் கடவுள்: அகிலேஷ் யாதவ்
ADDED : ஜன 09, 2024 03:43 PM

லக்னோ: பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினர் ஆகிய 3 பிரிவினர் தான் எங்கள் கடவுள். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை இந்த 3 பிரிவினர் தோற்கடிப்பர் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இது பற்றி மேலும் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: இந்த அரசு, சிறுபான்மையினருக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினர் ஆகிய 3 பிரிவினர் தான் எங்கள் கடவுள். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை இந்த 3 பிரிவினர் தோற்கடிப்பர். உத்தர பிரதேசத்தில் இருந்து பா.ஜ.,வை அகற்றுவது என்பது, நாட்டிலிருந்தே பா.ஜ.,வை அகற்றுவதற்கு சமம். நாட்டு மக்கள் பா.ஜ.,வை அகற்ற விரும்புகிறார்கள். வளர்ந்த இந்தியா என்று முழங்கி, கிராமங்கள் தோறும் வாகனங்களில் பிரசாரம் செய்வதன் மூலம் வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற முடியாது.
2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பா.ஜ., கூறியது. ஆனால் அது நடக்கவில்லை. ஆனால், நாட்டின் வேலையற்ற மக்களுக்கு மரியாதைக்குரிய வேலை கிடைக்கும் என எங்கள் சமாஜ்வாதி கட்சி உறுதியளிக்கிறது. பில்கிஸ் பானு தீர்ப்பால் நீதித்துறை மீது நம்பிக்கை பிறந்துள்ளது. நாங்கள் பா.ஜ.,வை நம்பவில்லை; ஆனால் நீதிமன்றத்தை நம்புகிறோம். பா.ஜ., அரசு பொய்யாக குற்றம் சாட்டிய அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.