"சுயசார்புடன் செயல்படும் பாதுகாப்புத்துறை" - ராஜ்நாத் சிங் பேச்சு
"சுயசார்புடன் செயல்படும் பாதுகாப்புத்துறை" - ராஜ்நாத் சிங் பேச்சு
ADDED : மார் 07, 2024 11:50 AM

புதுடில்லி: 'எங்கள் அரசு தான் பாதுகாப்புத்துறையில் சுயசார்பை கொண்டு வந்தது' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது: நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறோம் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு, முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும். மற்ற நாடுகளின் தொழில்நுட்பத்தை சார்ந்து ஒரு நாடு இருக்க கூடாது. சார்ந்து இருக்கும் போது, நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும். மற்ற நாடுகளை சார்ந்து இருக்கும் மனநிலையில் இருந்து விடுபட, பிரதமர் மோடி பாடுபடுகிறார். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது, பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
எங்கள் அரசு தான் பாதுகாப்புத்துறையில் சுயசார்பை கொண்டு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பாதுகாப்புத் துறைக்கு முன்னுரிமை அளித்து, தன்னம்பிக்கையை ஊக்குவித்துள்ளது. பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்(எச்.ஏ.எல்.,) போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் மீது அரசு நம்பிக்கை வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

