எங்கள் அரசு எப்போதும் பாடுபடும்: பிரதமர் மோடி உறுதி
எங்கள் அரசு எப்போதும் பாடுபடும்: பிரதமர் மோடி உறுதி
ADDED : ஏப் 10, 2025 09:00 AM

புதுடில்லி: ''பகவான் மகாவீரரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற எங்கள் அரசு எப்போதும் பாடுபடும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அகிம்சை, உண்மை மற்றும் இரக்கத்தை எப்போதும் வலியுறுத்திய பகவான் மகாவீரரை நாம் அனைவரும் வணங்குகிறோம். அவரது கொள்கைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
அவரது போதனைகள் சமண சமூகத்தால் பாதுகாக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி சமூக நல்வாழ்வுக்கு பங்களித்துள்ளனர். பகவான் மகாவீரரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற எங்கள் அரசு எப்போதும் பாடுபடும்.
கடந்த ஆண்டு, பிராகிருதம் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளோம், இது மிகுந்த பாராட்டைப் பெற்றது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.