sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசு திட்டங்களால் மக்களின் பணம் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி தகவல்

/

மத்திய அரசு திட்டங்களால் மக்களின் பணம் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி தகவல்

மத்திய அரசு திட்டங்களால் மக்களின் பணம் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி தகவல்

மத்திய அரசு திட்டங்களால் மக்களின் பணம் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி தகவல்


UPDATED : மார் 16, 2024 10:09 PM

ADDED : மார் 16, 2024 09:35 PM

Google News

UPDATED : மார் 16, 2024 10:09 PM ADDED : மார் 16, 2024 09:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி :நான் சாதாரண மனிதர்களுடன் வசிக்கின்றேன் அரசின் திட்டங்கள் சாதாரண மக்கள் பணத்தை சேமிக்க உதவுகிறது. மத்திய அரசு திட்டங்களின் மூலம் ரூ2.5 லட்சம் கோடி மக்களின் பணம் சேமிக்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்

தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் பேசியதாவது: நான் தலைப்பு செய்திக்காக வேலை செய்யவில்லை காலக்கெடுவுக்காக வேலை செய்கிறேன். நான் 2047 க்காக திட்டமிடுகிறேன் இளைஞர்களிடையே முத்ரா யோஜனா திட்டம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிரோன் தொழில்நுட்பம் பெண்களின் விதியில் மாற்றத்தை உருவாக்கி உள்ளது. கிராமப்புற பெண்கள் டிரோன் பைலட்டுகளாக அறியப்படுகின்றனர். சிறிய நகர இளைஞர்கள் ஸ்டார்ட் அப் புரட்சியை நடத்துகிறார்கள். ஆரோக்கிய மந்திர் திட்டம் உடல் நலத்தில் மாற்றத்தை நிகழ்த்துகிறது. 600 மாவட்டங்களில் 1.25 லட்சம் பேர்களால் ஸ்டார்ட் அப் துவக்கப்பட்டு உள்ளது.திறன் மேம்பாடு மூலம் தொழிற்புரட்சி 4.0 உருவாக்கப்படும். தெருவோர வியாபாரிகள் இன்று இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் முகமாக இருக்கிறார்கள்.

அரசின் திட்டங்கள் சாதாரண மக்கள் பணத்தை சேமிக்க உதவுகிறது. திட்டங்களின் மூலம் ரூ2.5 லட்சம் கோடிமக்களின் பணம் சேமிக்கப்பட்டு உள்ளது .எனது திட்டங்கள் அதிக நிர்வாக திறன் கொண்டது.நான் சாதாரண மனிதர்களுடன் வசிக்கின்றேன். வருமான வரி கட்டுவோர் விரைவு பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஏழைகளின் வறுமையையும் பணக்காரர்களின் வறுமையையும் பார்த்திருக்கின்றேன். நான்வெண்ணெயில் கோடு போட வரவில்லை. கல்லில் கோடு போட வந்தேன் ஏனெனில் உங்கள் குழந்தைகளுக்கு சம்ரித்பாரத் கொடுக்க விரும்புகிறேன்.

கடந்த ஆட்சியில் வட இந்திய பகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் வரும் போகும் நாங்கள் தேர்தலுக்காக பணி செய்யவில்லை அதே நேரத்தில் முழு பொறுப்புடன் செயல்படுகிறோம் . 2014 ஆம் ஆண்டு முதல் 680 முறை அமைச்சர்கள் வடகிழக்கு இந்திய பகுதிகளுக்கு சென்றுள்ளனர். அனைத்து பிரதமர்களை விட நான் தான் அதிகமாக வடகிழக்கு பகுதிகளுக்கு சென்றுள்ளேன்.சுவாட்ச் அபியான் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் பணம் ரூ.60 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தில் வாழ்க்கை எளிமை என்பது கேள்விப்படாத ஒன்று. சக்திவாய்ந்தவர்களுக்கு வளங்களில் முதல் உரிமை இருந்தது.என்னை பொறுத்த வரை எல்லையில் உள்ள ஒவ்வொரு கிராமமும் நாட்டின் முதல் கிராமம் தான்.நாங்கள் சட்டத்தை நியாய மையமாக மாற்றி உள்ளோம். அமலாக்கத்துறையால் 4,700 வழக்குகள் பதிவாகி உள்ளது. அமலாக்கத்துறை கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுதியான மற்றும் நிலையான அரசாங்கத்தை தருவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.






      Dinamalar
      Follow us