ADDED : மார் 08, 2024 02:19 AM

பெலகாவி: “தலித் முதல்வர் நியமிக்கும் விவகாரத்தில், காங்கிரஸ் 99 ரன்கள் அடிக்கிறது. ஒரு ரன்னில் சதம் நழுவது போல, கடைசியில் எல்லாம் நழுவுகிறது,” என, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி உள்ளார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகா காங்கிரசில் தலித் முதல்வர் விவகாரம், இன்று, நேற்று எழுந்தது இல்லை. 25 ஆண்டுகளாக இந்த பேச்சு உள்ளது.
கிரிக்கெட்டில், 99 ரன் அடித்து அவுட் ஆகி, ஒரு ரன்னில் சதத்தை நழுவவிடும் பேட்ஸ்மேன் போல, காங்கிரசில் முதல்வர் பதவிக்கு, தலித் சமூகத்தை சேர்ந்தவரை நியமிக்க, 99 ரன்கள் அடிக்கப்படுகிறது. ஆனால் கடைசியில் எல்லாம் நழுவுகிறது.
துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் ஆவதைத் தடுக்க, தலித் முதல்வர் கோஷம் கிளம்பவில்லை. தேர்தல் நேரத்தில் தலித் முதல்வர் கோஷம் தேவையற்றது.
அரசியல் என்றாலே சூழ்ச்சி தான். அனைத்து கட்சிகளிலும், சூழ்ச்சி வலை உள்ளது. அதில் சிக்கி தான் ஆக வேண்டி உள்ளது. எல்லா கட்சியிலும் ஒருவருக்காக ஒருவர், மிதிப்பட தான் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

