நான் வந்துட்டேன்; கெஜ்ரிவாலும் விரைவில் வருவார்; சிசோடியா நம்பிக்கை
நான் வந்துட்டேன்; கெஜ்ரிவாலும் விரைவில் வருவார்; சிசோடியா நம்பிக்கை
ADDED : ஆக 18, 2024 08:16 AM

புதுடில்லி: 'ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையிலிருந்து வெளியே வருவார்' என டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபத்தில் 17 மாதங்களுக்கு பிறகு, திஹார் சிறையில் இருந்து மணிஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டார். பட்பர்கஞ்ச் தொகுதி மக்களை அவர் சந்தித்தார். மக்கள் சிசோடியாவுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். சில பெண்களும் அவருக்கு ராக்கி கட்டினர். அவர் உள்ளூர் கடைக்காரர்கள் மற்றும் ரிக்ஷாக்காரர்களுடன் உரையாடினார். அவரை கட்டித்தழுவி செல்பி எடுத்து மக்கள் வரவேற்றனர்.
பின்னர் அவர் பேசியதாவது:
வரும் டில்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடையும் வரை என்னையும், கெஜ்ரிவாலையும் எப்படியாவது போலி வழக்குகளில் சிறையில் வைத்திருக்க பா.ஜ., சதி செய்தது. எங்கள் மீது பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் மாபியாவுக்கு எதிரான வழக்குகளைப் பதிவு செய்தனர்.
நான் 17 மாதங்களுக்குப் பிறகு, பட்பர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் என் சகோதர, சகோதரிகள் சந்தித்தது மகிழ்ச்சி.ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையிலிருந்து வெளியே வருவார். இவ்வாறு அவர் பேசினார்.

