தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வேகம் எடுக்கும் கொரோனா: ஆயிரத்தை கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!

வேகம் எடுக்கும் கொரோனா: ஆயிரத்தை கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!

வேகம் எடுக்கும் கொரோனா: ஆயிரத்தை கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!


UPDATED : மே 26, 2025 04:48 PM

ADDED : மே 26, 2025 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2025 04:48 PM ADDED : மே 26, 2025 02:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000த்தை கடந்துள்ளது. கேரளா, டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா அறிகுறிகளுடன் பலர் இருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்தது. பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று வரை 257 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இந் நிலையில், தற்போது மே 26ம் தேதி கணக்குபடி, நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, கேரளா, மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கேரளாவில் 335 பேர் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 430 ஆக உள்ளது.

இதேபோல மஹாராஷ்டிராவில் 153 பேரும், டில்லியில் 99 பேரும் கொரோனாவின் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதையடுத்து, மஹாராஷ்டிராவில் 209 பேரும், டில்லியில் 104 பேரும் தற்போது வரை சிகிச்சையில் இருக்கின்றனர்.

குஜராத்தில் 83 பேர், கர்நாடகா 47 பேர், உத்தரப்பிரதேசம் 15 பேர்,மேற்கு வங்கம் 12 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்றைய(மே 26) நிலவரப்படி ஒட்டு மொத்தமாக 1007 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us