1,600 பேர் மீது கிரிமினல் வழக்கு: இவர்களில் எத்தனை பேர் 'லா மேக்கர்ஸ்'
1,600 பேர் மீது கிரிமினல் வழக்கு: இவர்களில் எத்தனை பேர் 'லா மேக்கர்ஸ்'
UPDATED : மே 23, 2024 09:41 AM
ADDED : மே 23, 2024 09:34 AM

புதுடில்லி: நடந்து வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 1,644 பேர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டிருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
கொலை, பெண்கள் மீதான வன்முறை
தேர்தல் உரிமை தொடர்பாக ஜனநாயக சீர்திருத்த அசோசியேஷன் அமைப்பினர் திரட்டிய தகவலின்படி மொத்தம் 7 கட்ட தேர்தலில் 8,360 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 8,337 பேர் அபிடவிட் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் மொத்தம் 1,600 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் 1,188 பேர் மீது கொலை, கொலைமுயற்சி, பெண்கள் மீதான வன்முறை வழக்கு, வெறுப்பு பேச்சு, அவதூறு பேச்சு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
முதல்கட்ட தேர்தலில் களம்கண்ட வேட்பாளர்களில் 252 பேர், 2ம் கட்ட தேர்தலில் 250 பேர் , 3ம் கட்ட தேர்தலில் 244 பேர், 4ம் கட்ட தேர்தலில் 360 பேர், 159 பேர், 6ம் கட்ட தேர்தலில் 180 பேர், 7ம் கட்ட தேர்தலில் 199 பேர் மீது கிரிமினில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை 5 கட்ட தேர்தல் நடந்துள்ளது. இன்னும் 2 கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது.
