ADDED : நவ 15, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஹார் சட்டசபை தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தனித்து போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் வென்று அசத்தியுள்ளது. பீஹாரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியில் கணிசமான செல்வாக்கைக் கொண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி, மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில், 29 இடங்களில் போட்டியிட்டது. இதில், 24 தொகுதிகள் சீமாஞ்சல் பகுதியில் உள்ளன.
பீஹாரின் ஜோகிஹாட், பகதுர்கஞ்ச், கோச்சதமன், அமூர், பைசி ஆகிய ஐந்து தொகுதிகளில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி வென்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

