தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்ப்பு

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்ப்பு

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்ப்பு

1


UPDATED : ஜூலை 06, 2026 08:11 PM

ADDED : ஜூலை 06, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 08:11 PM ADDED : ஜூலை 06, 2026 07:53 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, தடை செய்யப்பட்ட லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை குற்றவாளியாக சேர்த்து, கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 2025 ஏப்., 22ல் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது.

இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ., கடந்த ஆண்டு டிசம்பரில், ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், 1,597 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ., தாக்கல் செய்துள்ளது. அதில், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் மீது, 'உபா' எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us