டில்லியில் பிரதமர் மோடி உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு; முக்கிய ஆலோசனை
டில்லியில் பிரதமர் மோடி உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு; முக்கிய ஆலோசனை
ADDED : ஏப் 28, 2025 11:45 AM

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 28) டில்லியில் பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையின் சூழல் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சந்திப்பின் போது, பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பார்லி குழு கூட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை குறித்த பார்லி நிலைக்குழு கூட்டம், இன்று மதியம் 3 மணிக்கு நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

