தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு


ADDED : ஏப் 29, 2025 10:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2025 10:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார்.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடிகொடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்து என்ன மாதிரி பதிலடி கொடுப்பது என்பது குறித்து டில்லியில் பரபரப்பாக ஆலோசனை நடக்கிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சருடன், முப்படை தளபதிகள் சந்தித்து பேசினர். உள்துறை அமைச்சகத்திலும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, டில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிவேதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால், டில்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது என்ன ஆலோசனை செய்யப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என பி.டி.ஐ., செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us