UPDATED : நவ 19, 2024 02:40 PM
ADDED : நவ 19, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லை பகுதியில் பாகிஸ்தான் கப்பலான நுஸ்ரத், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய மீனவர்களின் கால பைரவ் என்ற படகு சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தான் அதிகாரிகள் படகில் இருந்த ஏழு பேரை சிறை பிடித்தனர்.
இது குறித்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நம் நாட்டு கடலோர படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல்படையின் அக்ரீம் கப்பல், பாகிஸ்தான் கப்பலை இரண்டு மணி நேரம் விரட்டி அந்த கப்பலை தடுத்து நிறுத்தி அதிலிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களுடன் குஜராத்தின் ஓகா துறைமுகத்துக்கு இந்திய கடலோர காவல்படை கப்பல் வந்தது.