பாக்., ட்ரோன்கள் தாக்குதல்: நான்கு மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு
பாக்., ட்ரோன்கள் தாக்குதல்: நான்கு மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு
ADDED : மே 10, 2025 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பாக்., ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள நான்கு எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாக்., இந்திய எல்லையோர மாநிலங்களின் முக்கிய நகரங்களின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயன்று வருகிறது. இத்தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வகுகிறது.
இன்று நள்ளிரவு (மே:10) காஷ்மீரின் அவந்திபுராவில் பாகிஸ்தானின் 10 ட்ரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டன. இதைத்தவிர பஞ்சாபில் ஹம்பாலா மற்றும் அமர்தசரஸ் நகர், குஜராத்தின் கட்ச் மாவட்டம், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், காஷ்மீரில் ஸ்ரீநகர் நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. எல்லையோர நான்கு மாநிங்களில் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.