காஷ்மீரில் சமூகவலைதளத்தில் ஆட்சேர்ப்பு; பாக்., பயங்கரவாத அமைப்பு சதி அம்பலம்
காஷ்மீரில் சமூகவலைதளத்தில் ஆட்சேர்ப்பு; பாக்., பயங்கரவாத அமைப்பு சதி அம்பலம்
ADDED : நவ 10, 2024 12:35 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை சமூகவலைதளம் வாயிலாக ஊக்குவித்து, ஆட்சேர்ப்பு நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் சதி திட்டம் அம்பலமாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கவாதிகளின் சதிகளை முறியடிக்க பாதுகாப்பு படை வீரர்கள் போராடி வருகின்றனர். அவ்வபோது பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி, தக்க பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், காஷ்மீரில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை சமூகவலைதளம் வாயிலாக ஊக்குவித்து, ஆட்சேர்ப்பு நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் சதி திட்டம் அம்பலமாகி உள்ளது.
'இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை வெளியிட்டு வரும், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் கடந்த ஒரு மாதமாக சமூக ஊடகங்களில் அதிக பதிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த அமைப்புகள் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் இந்தியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை ஊக்குவித்துள்ளது.
இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதை இந்த அமைப்புகள் நோக்கமாக கொண்டுள்ளன'. இவ்வாறு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளை விட பயங்கரவாத அமைப்பில் சேருபவர்கள் எண்ணிக்கை சரிவை கண்டுள்ளது. இதற்கு பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் தான் காரணம் என்கின்றனர் பாதுகாப்பு துறை மூத்த அதிகாரிகள்.