sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி

/

பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி

பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி

பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி

16


UPDATED : ஜூலை 29, 2025 08:24 PM

ADDED : ஜூலை 29, 2025 06:29 PM

Google News

UPDATED : ஜூலை 29, 2025 08:24 PM ADDED : ஜூலை 29, 2025 06:29 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் இந்தியாவின் பதிலடியை தடுக்க முடியவில்லை,'' என பிரதமர் மோடி கூறினார்.

லோக்சபாவில் ' ஆபரேஷன் சிந்தூர்' மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் நிலை என்ன என்பதை விளக்க வந்துள்ளேன். நாட்டிற்காக இந்த அவையில் உரையாற்றுகிறேன். இந்திய மக்களுக்கு எதிரானவர்களிடம் கண்ணாடியை காட்டுவேன். ஆபரேஷன் சிந்தூரின் பின்னணியை அறியாமல் இருளில் உள்ளவர்களுக்கு விளக்கம் தருகிறேன். பஹல்காம் தாக்குதல் மனிதாபிமானத்தின் மீதான கொடூர தாக்குதல்

முழு சுதந்திரம்

மதத்தின் பெயரால் அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அத்தகைய பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட உறுதிபூண்டுள்ளோம். 'அவர்கள் யோசிக்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம்' என்று கூறியிருந்தேன். அதன்படி பதிலடி தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து இருந்தோம்.



எங்கே , எப்போது,எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என முடிவெடுக்க ராணுவத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. நமது ஆயுதப்படைகள் மீது முழு நம்பிக்கை உள்ளது. எப்படி திட்டமிட்டோமா அந்தளவு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை.

எடுபடாது

பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகள் எங்கு மறைந்து இருந்தனரோ அங்கு தாக்குதல் நடத்தி அழித்தாம். பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் இனி அணு ஆயுதஅச்சுறுத்தல் விட முடியாது.

பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ்


இந்தியா யாரையும் நம்பியில்லை. ஆனால், பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் இருக்கிறது. மக்கள் மனங்களில் சந்தேக விதைகளை விதைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது.நமது தாக்குதலின் முறை எப்படி இருந்தது என பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும்.ஆபரேஷன் சிந்தூர் இன்றும் தொடர்கிறது.சர்ஜிக்கல் தாக்குதல் நடந்ததற்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்கின்றன. காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது.

மக்கள் சிரிப்பு

விமானி அபிநந்தன் விவகாரத்தை வைத்து ராணுவத்தின் உறுதியை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தன. அவர் சிக்கிக் கொண்டதும், மோடி மாட்டிக்கொண்டார் என கிசுகிசுத்தன. நாம் அபிநந்தனை வெற்றிகரமாக மீட்டதும் எதிர்க்கட்சிகள் வாய்மூடி நின்றன. எதிர்க்கட்சிகளை பார்த்து ஒட்டு மொத்த நாட்டு மக்களும் சிரிக்கின்றனர். பாகிஸ்தான் செய்தித்தொடர்பாளராகவே காங்கிரஸ் மாறிவிட்டது. இந்தியாவின் ஒற்றுமை எதிராளியை சீர்குலைத்துவிட்டது.



கார்கில் போர் வெற்றி தினத்தை நாடே கொண்டாடும் போது காங்கிரஸ் அதனை ஏற்க மறுக்கிறது. பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் கட்சி நற்சான்றிதழ் அளிக்கிறது. மத்திய அரசை எதிர்க்க காங்கிரசுக்கு ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது. ராணுவத்தினருக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் எப்போதும் எடுக்கிறது. பாகிஸ்தானின் ரிமோட் கன்ட்ரோலாக காங்கிரஸ் மாறிவிட்டது.

பாக் கதறல்


மே 9 ம் தேதி பாகிஸ்தான் ஆயிரம் ஏவுகணை, ட்ரோன்களை வீசியது. ஆனால் ஒன்று கூட இந்தியாவை தொடவில்லை. நமது ஆதம்பூர் விமான தளத்தை தாக்கிவிட்டதாக பாகிஸ்தான் பொய் பரப்பியது. ஆனால், பொய்யை தகர்க்க ஆதம்பூர் விமான தளத்திற்கு நானே சென்றேன். போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது. ஆபரேஷன் மகாதேவ் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு ஈடுபட்டவர்களை பழிதீர்த்தோம். போர் நிறுத்த கோரிக்கையை வைத்தது பாகிஸ்தான்.

போதும் நிறைய அடித்துவிட்டீர்கள் என கெஞ்சியது. நமது தாக்குதல்களால் பாகிஸ்தான் அடிபணிந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆனால், ஆபரேஷன் சிந்தூரில் தாக்குதலுக்கான அனைத்து ஆயுதங்களும் இந்தியாவில் தயாரானவை. மேக் இன் இந்தியா ஆயுதங்கள் நமது பெருமையை பறைசாற்றுகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us