'திரிசூலம்' ராணுவ பயிற்சிக்கு தயாராகும் இந்தியா வான்வழியில் கட்டுப்பாடுகளை விதித்தது பாக்.,
'திரிசூலம்' ராணுவ பயிற்சிக்கு தயாராகும் இந்தியா வான்வழியில் கட்டுப்பாடுகளை விதித்தது பாக்.,
ADDED : அக் 26, 2025 12:02 AM
புதுடில்லி: பாகிஸ்தான் எல்லை அருகே, 'திரிசூலம்' என்ற பெயரில் நம் முப்படை களின் ராணுவ பயிற்சி, வரும் 30ல் துவங்கி நவ., 10 வரை நடக்க உள்ளதால், தங்கள் வான்பரப்பில் உள்ள விமான போக்குவரத்து பாதைகளில் பாக்., கட்டுப்பா டுகளை விதித்துள்ளது.
குஜராத்திற்கும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையே உள்ள கழிமுகம், 'சர் கிரீக்' என்று அழைக்கப்படுகிறது.
இங்கு, வரும் 30 முதல் நவ., 10 வரை, முப்படைகளும் இணைந்து, 'திரிசூலம்' என்ற பெயரில் மிகப்பெரிய ராணவ பயிற்சிகளை நடத்த உள்ளது. இதனால் அப்பகுதியில் வான்வழி விமான போக்குவரத்தை நிறுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
முப்படைகளின் கூட்டு செயல்திறன், தன்னிறைவு இந்தியா மற்றும் ராணுவத்தின் நவீனத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம்.
'திரிசூலம்' பயிற்சி நடக்க உள்ள சர் கிரீக் பகுதி என்பது, குஜராத் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் இடையேயான, 96 கி.மீ., நீள சதுப்பு நிலம். இங்கு மக்கள் வசிக்கவில்லை. ஆனால், இந்திய கடற்பாதைகளுக்கு மிக முக்கியமான நுழைவு வாயில் என்பதால் இந்த பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே இவ்வாறான நிழல் மோதல்கள் வழக்கமான ஒன்றாகி விட்டன.
இந்த பயிற்சி குறித்து ராணுவ ஆய்வாளர் டேமியன் சைமன் வெளியிட்ட அறிக்கையில், 'பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட வான்வழி, 28,000 அடி உயரம் வரை விரிகிறது. இவ்வளவு பெரிய பரப்பும், பங்கேற்பு அளவும் வழக்கத்திற்கு மாறானது' என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நம் நாட்டின் இந்த ராணுவ பயிற்சி காரணமாக பாகிஸ்தான் அதன் மத்திய மற்றும் தெற்கு வான்வழி பரப்புகளில், 29ம் தேதி முதல் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிட் டுள்ளது.

