போரை நிறுத்தும்படி பாக்., தான் நம்மிடம் மண்டியிட்டது!: லோக்சபாவில் மோடி 'பளிச்'
போரை நிறுத்தும்படி பாக்., தான் நம்மிடம் மண்டியிட்டது!: லோக்சபாவில் மோடி 'பளிச்'
UPDATED : ஆக 10, 2025 01:41 PM
ADDED : ஜூலை 29, 2025 11:50 PM

புதுடில்லி : ''ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை நிறுத்த எந்தவொரு உலகத் தலைவரும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவில்லை,'' என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். லோக்சபாவில், 'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பான சிறப்பு விவாதம் இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதல் முறையாக மறுப்பு தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக தொடரப்பட்ட ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை நிறுத்தும்படி எந்தவொரு உலக நாடுகளின் தலைவர்களும் கோரிக்கை விடுக்கவில்லை.
இதை முதல் நாளில் இருந்தே கூறி வருகிறோம். மே 9ம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மட்டுமே என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
அப்போது முப்படை அதிகாரிகளுடன் தாக்குதல் தொடர்பான முக்கிய கூட்டத்தில் பங்கேற்றதால், அவரது அழைப்பை உடனடியாக ஏற்க முடியவில்லை. பின்னர் அவரை நான் தொடர்பு கொண்டபோது, பாகிஸ்தான் மிகப் பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் அளித்தார்.
பாகிஸ்தானின் நோக்கம் அப்படி இருந்தால், அதற்கு மிகப் பெரிய விலையை அந்நாடு தர வேண்டியிருக்கும் என ஜே.டி.வான்சுக்கு நான் பதில் அளித்தேன் .
மே 9, மற்றும் 10ம் தேதிகளில் பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் நம் ஏவுகணைகள் தாக்கின. இத்தனை பெரிய தாக்குதலை அவர்கள் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
அதன் காரணமாகவே, போரை நிறுத்தும்படி, நம்மிடம் பாகிஸ்தான் மண்டியிட்டது. இனியும், இந்திய படைகளின் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாது என பாகிஸ்தானின் ராணுவ தரப்பும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.
பயங்கரவாதிகளும், அவர்களது முகாம்களும் தான் நம் படைகளின் இலக்கு என்பதால், அதை எட்டிவிட்ட திருப்தியில் சண்டையை நிறுத்த முடிவு செய்தோம்.
குரலை மாற்றிய காங்.,
'ஆப்பரேஷன் சிந்தார்' நடவடிக்கைக்கு உலக நாடு களின் ஆதரவு கிடைத்தது. சோகம் என்னவெனில் நம் சொந்த மண்ணில் காங்கிர ஸிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. பஹல் காம் தாக்குதலில் உயிரிழந் தவர்களை வைத்து எனக்கு எதிராக அரசியல் செய்ய நினைத்தனர்.மோடியின் 56 இன்ச் மார்பு ஏன் சுருங்கியது என் றெல்லாம் கேள்வி எழுப் பினர். நம் படைகளின் வலிமை மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. அதனால் தான், 'ஆப்பரேஷன் சிந் துார்' பற்றி கேள்வி எழுப் பினர்.ஒரு கட்டத்தில், 'ஆப்ப ரேஷன் சிந்துார்' நடவடிக் கைக்கு நாட்டு மக்கள் ஆத ரவு அளித்து வருகின்றனர் என தெரிந்ததும், எதிர்க்கட் சியினர் தங்களது குரலை மாற்றிக் கொண்டனர்.இவ்வாறு மோடி பேசினார்.
எங்கள் கேள்விகளுக்கு பதில் இல்லையே? ராகுல் விடாப்பிடியாக குற்றச்சாட்டு மழை
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதா வது: ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்தோம். எதிர்க்கட்சிகள் அதற்காக பெருமைப்படுகிறோம். ஆனால், ராணுவ
தாக்குதல் என முடிவெடுத் துவிட்டால், 100 சதவீத அரசியல் உறுதியும், சுதந் திரமான நடவடிக்கையும் தேவை.
கடந்த 1971ல், அரசியல் உறுதி இருந்தது. பிரதமர் இந்திரா, 'ஆறு மாதமோ, ஒரு வருடமோ எடுத்துக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று ராணுவ தளபதி யிடம் உறுதி அளித்தார். விளைவு, 1 லட்சம் பாக்., வீரர்கள் சரணடைந்தனர். வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது.
ஆனால், ஆப்பரேஷன்சிந்தூர் நடந்தபோது, உலகில் ஒரு நாடு கூட பாகிஸ்தான் என்ற வார்த்தையை சொல்ல வில்லை. அதாவது, அவர்கள் இந்தியாவை யும் பாகிஸ்தானையும் ஒரே தராசில் ஒரே மாதிரி பார்த்தார்கள். பாகிஸ்தான் தான் பயங்கர வாத நாடு, இந்தியா பாதிக்கப்பட்ட நாடு என்பதை புரிந்து உலகம் கொள்ள வில்லை. அதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தோல்வி அடைந்து விட்டார்.
மேலும், நமது தாக்கு தலால் பாகிஸ்தான் ராணுவம் நிலை குலைந்து நின்றபோது, அதன் தளபதியை அழைத்து, உங்கள் ராணுவ தளங்களை நாங்கள் தாக்க மாட்டோம் என்று இந்தியா உறுதிமொழி கொடுக்க என்ன அவசியம்? இதை நானாக கேட்கவில்லை. நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்னதைத் தான் திரும்ப சொல்கி றேன்
.அனைத்துக்கும் காரணமான பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் டிரம்ப் முனீரை, அமெரிக்க அதிபர் அழைத்து வெள்ளை மாளிகையில் விருந்து கொடுக்கிறார். என்னுடைய நண்பர் என மோடி பெருமையாக சொல்லும் டிரம்ப் எப்படி இதை செய்தார்? தவிர, இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று நூறுமுறை டிரம்ப் சொன்னார். மோடி அதை இன்று வரை மறுக்கவே இல்லை.
இந்த பார்லி மென்டில் நின்று, 'அமெரிக்க அதிபர் பொய்யர்' என கூறுவ தற்கு, மோடிக்கு துணிச் சல் இருக்கிறதா? பஹல்காமில் மக்களை காப்பாற்ற இயலாத மோடி, தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள ராணுவத்தை பயன்படுத்தினார் என்பதே உண்மை. ராணுவத்தின் கைகளை அவர் கட்டிப் போட்டதால் தான் நாம் ரபேல் விமானங்களை இழக்க நேரிட்டது. அதைக் கூட மறைக்க முயல்கிறார் மோடி. இவ்வாறு ராகுல் பேசினார்.