sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்: டிரெண்டாகும் மீம்ஸ்கள்...!

/

இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்: டிரெண்டாகும் மீம்ஸ்கள்...!

இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்: டிரெண்டாகும் மீம்ஸ்கள்...!

இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்: டிரெண்டாகும் மீம்ஸ்கள்...!

13


UPDATED : பிப் 16, 2026 11:30 AM

ADDED : பிப் 16, 2026 11:25 AM

Google News

13

UPDATED : பிப் 16, 2026 11:30 AM ADDED : பிப் 16, 2026 11:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இதனையடுத்து பாகிஸ்தானை கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் வைரல் ஆகி உள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் 10வது டி20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்தத் தொடரில், வங்கதேசம் அணி நீக்கப்பட்டது. அதனால், அந்நாட்டிற்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கூறியது. பின்னர் ஐசிசி அதிகாரிகள் நேரில் பாகிஸ்தான் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு எட்டவே நேற்று இலங்கையில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாடியது.

இந்த இரு நாடுகள் மோதும் கிரிக்கெட் போட்டிக்கு எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதனால், நேற்று நடந்த போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது. போட்டியை பார்க்க இரு நாட்டை சேர்ந்த வீரர்களும் இலங்கையில் குவிந்தனர்.

போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு பாகிஸ்தானும் கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கெட்கள் மளமளவென சரிந்தன. அந்த அணி 18 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இந்தியா வெற்றி பெற்றதை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் 9 முறை இரு அணிகளும் மோதிய நிலையில், இந்தியா 8 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றது கிடையாது என்ற வரலாறு தொடர்ந்து தக்க வைக்கப்பட்டே வருகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது.

இந்தியாவின் வெற்றியை கொண்டாடும் இந்திய ரசிகர்கள், சமூக ஊடகங்களில் பாராட்டி கருத்து பதிவிடுகின்றனர். அத்துடன் பாகிஸ்தானை கிண்டல் செய்யும் வகையில், பல்வேறு விதமான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ஏராளமானோர் கமெண்ட் செய்தும், அதனை மறுபதிவும் செய்து வருகின்றனர். இதனால், இந்தியா பாகிஸ்தான் குறித்த டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆக உள்ளது.






      Dinamalar
      Follow us